அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 உடனே விண்ணப்பிங்க! Anganwadi Recruitment 2025 Apply Link Puducherry
அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 உடனே விண்ணப்பிங்க!
Anganwadi Recruitment 2025 Apply Link Puducherry
Anganwadi Recruitment 2025 Apply Link Puducherry: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் (Department of Women and Child Development) கீழ் செயல்படும் சாக்ஷாம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 (Saksham Anganwadi and Poshan 2.0) திட்டத்தின்கீழ், 618 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மதிப்பூதியத்தின் (Honararium) அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர்.

காலிப்பணியிட விவரங்கள்
மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பதவிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- அங்கன்வாடி பணியாளர் (Anganwadi Worker):
- காலிப்பணியிடங்கள்: 344
- மாத மதிப்பூதியம்: ₹ 6,000
- அங்கன்வாடி உதவியாளர் (Anganwadi Helper):
- காலிப்பணியிடங்கள்: 274
- மாத மதிப்பூதியம்: ₹ 4,000
- மொத்த காலிப்பணியிடங்கள்: 618
கல்வி மற்றும் இதர தகுதிகள்
- கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கக் கூடியவர்கள்: பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- இருப்பிடம்: விண்ணப்பதாரர் புதுச்சேரியைச் சேர்ந்தவராகவும், அங்கன்வாடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வசிப்பவராகவும் இருக்க வேண்டும் (இதற்கான குடியிருப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்).
வயது வரம்பு (ஆகஸ்ட் 31, 2025 நிலவரப்படி)
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 35 வயது
தேர்வு செய்யப்படும் முறை
- விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது.
- 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- அங்கன்வாடிக்கு அருகில் வசிப்பவர்களுக்கும், நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.
- தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை, தலைவர், செயலாளர்கள், உறுப்பினர்கள் அடங்கிய தேர்வுக் குழு மெரிட் அடிப்படையில் வெளியிடும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய நாட்கள்
- விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- இணையதளம்: https://wcd.py.gov.in/
- நேரடி விண்ணப்பப் படிவம் (Google Form): https://forms.gle/uu6rwytW8rpYGgkL7
- விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
முக்கிய நாட்கள்:
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள்: அக்டோபர் 1, 2025 (காலை 10 மணி முதல்)
- ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31, 2025 (மாலை 5 மணி வரை)
குறிப்பு: கல்வித் தகுதி, குடியிருப்பு/வசிப்பிட சான்றிதழ், அடையாள அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும்.



Post Comment