உளவுத்துறையில் 258 காலி பணியிடங்கள் அறிவிப்பு!- கல்வி தகுதி தேர்வு செய்யும் வழிமுறை? IB Recruitment 2025 Apply Online
உளவுத்துறையில் 258 காலி பணியிடங்கள் அறிவிப்பு!- கல்வி தகுதி தேர்வு செய்யும் வழிமுறை?
IB Recruitment 2025 Apply Online
IB Recruitment 2025 Apply Online : உளவுத்துறையில் (Intelligence Bureau – IB) காலியாக உள்ள Assistant Central Intelligence Officer Grade-II/Tech (ACIO-II/Tech) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: இந்திய உளவுத்துறை (Intelligence Bureau – IB)
- வேலை வகை: மத்திய அரசு வேலை
- பதவி: Assistant Central Intelligence Officer Grade-II/Tech (ACIO-II/Tech)
- மொத்த காலியிடங்கள்: 258
- சம்பளம்: மாதம் ₹44,900 – ₹1,42,400 வரை (நிலை 7)
- பணியிடம்: இந்தியா முழுவதும்
- விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 25.10.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.11.2025
கல்வித் தகுதி (Educational Qualification)
விண்ணப்பதாரர்கள், GATE 2023, 2024, அல்லது 2025 தேர்வுகளில் Computer Science & Information Technology (GATE Code: CS) அல்லது Electronics & Communication (GATE Code: EC) ஆகிய துறைகளில் தகுதி மதிப்பெண்கள் (Qualifying Cut-off Scores) பெற்றிருப்பதுடன், பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்:
- பொறியியல் பட்டம் (Graduate Degree in Engineering):
- Electronics and Communication
- Electrical and Electronics
- IT (Information Technology)
- CS (Computer Science)
- Computer Engineering
- Electronics
- Electronics and Telecommunication
- Computer Science and Engineering (அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/கல்லூரி/நிறுவனம்)
அல்லது
- முதுகலைப் பட்டம் (Master’s Degree):
- Master’s Degree in Science with Electronics
- Master’s Degree in Science with CS (Computer Science)
- Master’s Degree in Science with Physics with Electronics
- Master’s Degree in Science with Electronics & Communication
- MCA (Master of Computer Applications) (அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/கல்லூரி/நிறுவனம்)
வயது வரம்பு (As on 16.11.2025)
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 27 வயது
- வயது தளர்வு: SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் உண்டு.
விண்ணப்பக் கட்டணம்
- பெண்கள் / SC / ST / PWD பிரிவினர்: ₹100/-
- மற்றவர்கள் (Others): ₹200/-
தேர்வு செய்யும் முறை
- GATE 2023 அல்லது 2024 அல்லது 2025 மதிப்பெண்கள்.
- திறன் தேர்வு (Skill Test)
- நேர்காணல் (Interview)
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் www.mha.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.



Post Comment