இந்திய போஸ்ட் ஆபீஸ் வங்கியில் 30000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 348 காலிப்பணியிடங்கள் விண்ணப்பிப்பது எப்படி?
IPPB Recruitment 2025 Apply Online Now
IPPB Recruitment 2025 Apply Online Now:இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (IPPB), தற்போது எக்சிகியூடிவ் பணியிடங்களுக்கு மொத்தம் 348 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நியமனம் தற்காலிக அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 17 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை பட்டப்படிப்பை (டிகிரி) முடித்திருக்க வேண்டும்.
மேலும், 01.08.2025 அன்று விண்ணப்பதாரரின் வயது 20 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 30,000 சம்பளமாக வழங்கப்படும்.
முக்கிய குறிப்பு:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தற்பொழுது தபால் அலுவலகத்தில் ஜி.டி.எஸ் (GDS) எனப்படும் கிராம அஞ்சல் ஊழியர்களாக பணியாற்றி வருபவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.
தகுதியான நபர்கள், பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்புவோர் https://ibpsonline.ibps.in/ippblaug25/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2025 ஆகும். மேலும், விண்ணப்பக் கட்டணமாக அனைத்துப் பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும்.



Post Comment