தீவிர புயல்: 18 மாவட்டங்களில் மழை வெளுத்துக்கட்டும்! Monta Cyclone 18 Districts Rain Alerts
தீவிர புயல்: 18 மாவட்டங்களில் மழை வெளுத்துக்கட்டும்!
Monta Cyclone 18 Districts Rain Alerts
Monta Cyclone 18 Districts Rain Alerts : மொன்டா புயல் தீவிரமடைந்துவரும் நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை (தி.மலை), கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி (குமரி), தென்காசி, நெல்லை, விருதுநகர், கடலூர், மயிலாடுதுறை, மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் பாதுகாப்பாக உடனே தங்கள் வீடுகளுக்குத் திரும்பும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Post Comment