PG TRB Provisional Selection List 2025
TRB முக்கிய அறிவிப்பு: முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் காலிப்பணியிடங்களுக்கான தற்காலிகத் தெரிவுப் பட்டியல் வெளியீடு!
PG TRB Provisional Selection List 2025 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), 2025-ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை-1) மற்றும் கணினி பயிற்றுநர்கள் (நிலை-1) உள்ளிட்ட 14 பாடப் பிரிவுகளுக்கான தற்காலிகத் தெரிவுப் பட்டியலை (Provisional Selection List) தற்போது வெளியிட்டுள்ளது.

தேர்வு மற்றும் தேர்வு நடைமுறைகள் ஒரு பார்வை:
அறிவிப்பு வெளியீடு: இந்த காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு (Notification No. 02/2025) கடந்த 10.07.2025 அன்று வெளியிடப்பட்டது.
தேர்வு நடைபெற்ற நாள்: இதற்கான எழுத்துத் தேர்வுகள் 12.10.2025 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றன.
முடிவுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு: தேர்வு முடிவுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் 27.11.2025 அன்று இணையதளத்தில் வெளியானது.
சான்றிதழ் சரிபார்ப்பு நாட்கள்: இதனைத் தொடர்ந்து 05.12.2025, 06.12.2025, 08.12.2025 மற்றும் 09.12.2025 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன.
தற்காலிகத் தெரிவுப் பட்டியல் தயாரிப்பு முறை:
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்தத் தற்காலிகத் தெரிவுப் பட்டியலானது பின்வரும் முக்கிய காரணிகளின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது:
விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் உண்மைத்தன்மை.
எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள்.
தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி (Communal Rotation) முறை.
அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பிற நடைமுறை விதிகள்.

முடிவுகளைப் பார்ப்பது எப்படி?
தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, பாடவாரியாக வெளியிடப்பட்டுள்ள தற்காலிகத் தெரிவுப் பட்டியலைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாள்: 22.01.2026
வெளியீடு: தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம்.
PG TRB SELECTION LIST 2026 Click
