ரேஷன் கார்டு:அரசு கொண்டு வந்த 7 முக்கிய மாற்றங்கள்! Ration Card 7 Major Changes Introduced Central Govt

Ration Card 7 Major Changes Introduced Central Govt

ரேஷன் கார்டு:அரசு கொண்டு வந்த 7 முக்கிய மாற்றங்கள்!

Ration Card 7 Major Changes Introduced Central Govt

ரேஷன் கார்டு: பொது விநியோகத் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 7 முக்கிய மாற்றங்கள்

Ration Card 7 Major Changes Introduced Central Govt: மத்திய அரசு, பொது விநியோகத் திட்டத்தில் (PDS) வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் அண்மைக்காலமாகப் பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது.

குறிப்பாக, தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் (Modernisation and Technology-Driven Reforms) மூலம் அதன் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் சரியான பயனாளிகளுக்கு அனைத்துப் பொருட்களும் கிடைப்பதை உறுதி செய்ய இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp Channel Join
Telegram Channel Join

Ration Card 7 Major Changes Introduced Central Govt

இந்தச் சீர்திருத்தங்கள் மூலம், உணவுப் பொருள் விநியோகத்தில் உள்ள முறைகேடுகளைக் குறைத்து, உண்மையான பயனாளிகளுக்குப் பலன் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

பொது விநியோகத் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 7 முக்கிய மாற்றங்கள்:

1. ஸ்மார்ட்-பி.டி.எஸ் (SMART-PDS) திட்டம்

பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்பக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாற்றங்களை உருவாக்கவும், SMART-PDS (Scheme for Modernization and Reforms through Technology in Public Distribution System) எனும் திட்டம் இந்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் டிசம்பர் 2025-க்குள் பல்வேறு கட்டங்களாகச் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இது நான்கு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது:

  • உணவு தானியக் கொள்முதல் (Food grains procurement)
  • விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் தானியப் பங்கீடு (Supply chain management and allocation of grains)
  • ரேஷன் கார்டு மற்றும் நியாயவிலைக் கடை மேலாண்மை (Ration card and Fair Price Shop management)
  • பயோமெட்ரிக் அடிப்படையிலான தானிய விநியோக முறை (e-KYC) (Biometric-based grain distribution Module)

2. மேரா ரேஷன் 2.0 மொபைல் செயலி (Mera Ration 2.0 Mobile App)

பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான வசதி மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த, “மேரா ரேஷன் 2.0” மொபைல் செயலி 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று உணவு மற்றும் பொது விநியோகத் துறையால் தொடங்கப்பட்டது.

இந்தச் செயலி, பயனாளிகளுக்குத் தங்களின் உரிமைகள், பொருள் பெற்ற விவரங்கள், அருகிலுள்ள நியாயவிலைக் கடையின் இருப்பிடம் போன்ற தகவல்களை நிகழ்நேரத்தில் வழங்குகிறது.

இது புதிய வசதிகளுடன் எளிமையான பயன்பாட்டு அனுபவத்தை வழங்குகிறது. இந்தச் செயலி இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

3. நியாயவிலைக் கடைகள் தானியக்கம் (Automation of Fair Price Shops – FPS)

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் உணவு தானியங்களை மின்னணு மற்றும் வெளிப்படையான முறையில் விநியோகிப்பதற்காக, கிட்டத்தட்ட அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தற்போது மின்னணு விற்பனை முனையம் (ePoS) கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இது பயோமெட்ரிக் / ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தின் மூலம் உணவுப் பொருளை விநியோகிக்க உதவுகிறது. மோசடியைக் குறைக்க இந்தத் திட்டம் பெருமளவு உதவி செய்கிறது.

4. ஆதார் இணைப்பு மற்றும் தரவு எண்ணிமமயமாக்கல் (Aadhaar Seeding & Digitization)

பொது விநியோகத் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் தகவல் தொகுப்பினை மேம்படுத்த, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரேஷன் அட்டைகள் மற்றும் பயனாளிகளின் தரவுத்தளம் 100% முழுமையாக எண்ணிமமயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அளவில் சுமார் 99.9% ரேஷன் அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன (Aadhaar Seeding).

5. ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு (One Nation, One Ration Card – ONORC)

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சி, பயனாளிகள் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் பொது விநியோகத் திட்டத்தின் பலன்களைப் பெற அனுமதிக்கிறது.

இதனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட அனைவரும் நாடு முழுவதும் எங்கும் தங்கள் ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி மற்றும் அணுகுமுறையை இது உறுதி செய்கிறது.

6. இணையதளப் பங்கீடு மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை (Online Allocation & Supply Chain Management)

சண்டிகர், புதுச்சேரி, மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி நகர்ப்புறப் பகுதிகள் தவிர, மற்ற அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் இணையதளப் பங்கீடு (Online Allocation) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் நேரடிப் பணப் பரிமாற்றத்தை (DBT – Direct Benefit cash transfer) ஏற்றுள்ளன. மேலும், 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் விநியோகச் சங்கிலி மேலாண்மை கணினிமயமாக்கப்பட்டுள்ளது (Supply chain management computerized).

7. வெளிப்படைத்தன்மை மற்றும் குறை தீர்க்கும் வசதி (Transparency & Grievance Redressal)

அரசு, பொது விநியோகத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க நாடு முழுவதும் ஒரு இணையதளப் பதிவகத்தையும், குறை தீர்க்கும் வசதியையும் (Online Grievance Redressal) நடைமுறைப்படுத்தியுள்ளது.

மேலும், பயனாளிகள் தங்கள் புகார்களைப் பதிவு செய்ய மற்றும் உதவிகளைப் பெற 1967/1800-மாநிலத் தொடர் எண் கொண்ட கட்டணமில்லா உதவி எண்ணை (Toll-Free Number) அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது.

பொது விநியோகத் திட்டத்தில் ஊழல் அல்லது முறைகேடு குறித்த புகார்கள் விசாரணை மற்றும் உரிய நடவடிக்கைக்காக மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு உடனடியாக அனுப்பப்படுகின்றன.

இந்த ஏழு மாற்றங்களும் பொது விநியோகத் திட்டத்தை நவீனமயமாக்குவதிலும், ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.

வணக்கம், என் பெயர் யமுனா. நான் கணிதவியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். நான் TN நியூஸ் லைட் வெப்சைட் மூலமாக எளிமையாக தமிழில் செய்திகளை பதிவு செய்து வருகிறேன். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் உண்டு.

Post Comment

You May Have Missed