ரயில்வேயில் 3058 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!- கல்வித் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முழு விவரங்கள்! RRB NTPC Recruitment 2025 Apply Details
ரயில்வேயில் 3058 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!- கல்வித் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முழு விவரங்கள்!
RRB NTPC Recruitment 2025 Apply Details
RRB NTPC Recruitment 2025 Apply Details : ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களில் 3058 Non-Technical Popular Categories (NTPC) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

- நிறுவனத்தின் பெயர்: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
- பணியின் வகை: மத்திய அரசு வேலை
- மொத்த காலியிடங்கள்: 3058
- விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 28.10.2025
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 27.11.2025
- விண்ணப்ப முறை: ஆன்லைன் (Online)
பதவி வாரியான விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் சம்பளம்
இந்த அறிவிப்பில் மொத்தம் நான்கு வகையான பதவிகள் உள்ளன. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- Commercial Cum Ticket Clerk:
- காலியிடங்கள்: 2424
- அடிப்படை மாதச் சம்பளம்: ₹21,700/-
- கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
- Accounts Clerk Cum Typist:
- காலியிடங்கள்: 394
- அடிப்படை மாதச் சம்பளம்: ₹19,900/-
- கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினியில் ஆங்கிலம்/இந்தியில் தட்டச்சு திறன் அத்தியாவசியம்.
- Junior Clerk Cum Typist:
- காலியிடங்கள்: 163
- அடிப்படை மாதச் சம்பளம்: ₹19,900/-
- கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினியில் ஆங்கிலம்/இந்தியில் தட்டச்சு திறன் அத்தியாவசியம்.
- Trains Clerk:
- காலியிடங்கள்: 77
- அடிப்படை மாதச் சம்பளம்: ₹19,900/-
- கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு மற்றும் தளர்வு
01.01.2026 தேதியின்படி, விண்ணப்பதாரரின் வயது 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
- வயது வரம்புத் தளர்வு:
- SC/ ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள்
- OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள்
- PwBD (பொதுப் பிரிவு) பிரிவினருக்கு: 10 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்
- பொது, OBC, EWS பிரிவினர்: விண்ணப்பக் கட்டணம் ₹500/-. (CBT தேர்வில் கலந்துகொண்டால் ₹400/- திரும்ப அளிக்கப்படும்).
- SC, ST, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் (EBC): விண்ணப்பக் கட்டணம் ₹250/-. (CBT தேர்வில் கலந்துகொண்டால் முழுத் தொகையும் திரும்ப அளிக்கப்படும்).
தேர்வு செய்யும் முறை மற்றும் முக்கிய நாட்கள்
பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் படிநிலைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- முதல் நிலை கணினி வழித் தேர்வு (CBT-1)
- இரண்டாம் நிலை கணினி வழித் தேர்வு (CBT-2)
- தட்டச்சுத் திறன் தேர்வு (Typing Skill Test) / திறன் தேர்வு (பதவிக்கு ஏற்ப)
- ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.10.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2025
விண்ணப்பிக்கும் வழிமுறை
விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்துத் தகுதிகளையும் முழுமையாகப் படித்து உறுதி செய்து கொள்ளவும்.



Post Comment