ரயில் டிக்கெட் முன்பதிவு அட்டவணை இனி 10 மணி நேரம் முன் வெளியீடு Train Ticket Chart Timing Updated 10 Hours Before Published Now

Train Ticket Chart Timing Updated 10 Hours

ரயில் டிக்கெட் முன்பதிவு அட்டவணை இனி 10 மணி நேரம் முன் வெளியீடு

புதுடில்லி: ரயில் பயணிகள் இனிமுதல் தங்களின் முன்பதிவு டிக்கெட் நிலையை ரயில் புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரத்திற்கு முன்னதாகவே அறிந்துகொள்ள முடியும். இதற்கான அட்டவணை வெளியீட்டு நேரத்தை ரயில்வே துறை மாற்றியுள்ளது.

Train Ticket Chart Timing Updated 10 Hours
Train Ticket Chart Timing Updated 10 Hours

தற்போது, பயணிகள் டிக்கெட்டுகளை இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதுவரை, ரயில் புறப்படும் நேரத்துக்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னர் தான் காத்திருப்பு, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் விவரங்கள் வெளியிடப்பட்டன. இதனால் கடைசி நேரத்தில் டிக்கெட் ரத்தாகும் சூழ்நிலைகளில் மாற்று பயண ஏற்பாடுகளைச் செய்வதில் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

இந்த பிரச்சினையை தீர்க்க, முன்பதிவு அட்டவணையை குறைந்தது எட்டு மணி நேரத்திற்கு முன் வெளியிட வேண்டும் என பயணியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அதன் பேரில், அனைத்து மண்டல ரயில்வேயும் கடந்த ஜூலை மாதம் முதல் 8 மணி நேரம் முன் அட்டவணை வெளியீட்டினை செயல்படுத்தி வந்தன.

இப்போது, அந்த நேரம் 10 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி:

  • காலை 5.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு அட்டவணை முந்தைய நாள் இரவு 8.00 மணிக்கே வெளியிடப்படும்.

  • மற்ற அனைத்து ரயில்களும் புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரத்திற்கு முன்பாக முன்பதிவு அட்டவணை வெளியிடப்படும்.

இந்த புதிய ஏற்பாடு உடனடியாக அமலுக்கு வரும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

ஓலா, ஊபருக்கு சவால்! ஜனவரி 1 முதல் களமிறங்கும் ‘பாரத் டாக்சி’ செயலி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் –  https://www.facebook.com/Information-in-tamil-102547374908798

டெலிக்ராம் – https://t.me/informationintamil

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029VaEh4h0Jf05UU5nIsw2L

Instagram : https://www.instagram.com/tamil_naduinfo?igsh=MTd3MzA3OW16bmVobA==

Youtube : https://www.youtube.com/c/Informationintamil

Leave a Comment