10th படித்தவர்களுக்கு இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
TNHRCE Srirangam Temple Recruitment 2025
TNHRCE Srirangam Temple Recruitment 2025: திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கியத் தகவல்கள் ஆகும்.

முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: இந்து சமய அறநிலையத் துறை (அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்)
- வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
- மொத்த காலியிடங்கள்: 31
- பணியிடம்: திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம்
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.10.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2025
- விண்ணப்ப கட்டணம்: இல்லை
- தேர்வு முறை: நேர்காணல்
- வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பிக்க தகுதி: இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்கள்.
தங்கம் விலை தடாலடியாக சரிவு!- நகை பிரியர்கள் உற்சாகம்!
பதவி மற்றும் கல்வித் தகுதி விவரங்கள்
- இளநிலை உதவியாளர் (10 காலியிடங்கள்)
- சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
- கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கூர்க்கா (02 காலியிடங்கள்)
- சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- திருவலகு (04 காலியிடங்கள்)
- சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- கால்நடை பராமரிப்பாளர் (02 காலியிடங்கள்)
- சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- பெரிய சன்னதி உடல் (01 காலியிடம்)
- சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- பெரிய சன்னதி வீரவண்டி (01 காலியிடம்)
- சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- பெரிய சன்னதி சேமக்களம் மற்றும் இதர வாத்தியங்கள் (01 காலியிடம்)
- சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியங்கள் (01 காலியிடம்)
- சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- உதவி யானைப்பாகன் (02 காலியிடங்கள்)
- சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். யானைக்கு பயிற்சி அளித்து, கட்டுப்படுத்தி, வழிநடத்தும் திறனுடன் யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழியை பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
- சலவையாளர் (01 காலியிடம்)
- சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- கூட்டுபவர் (06 காலியிடங்கள்)
- சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் நடைமுறை
- விண்ணப்பப் படிவத்தை திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://srirangamranganathar.hrce.tn.gov.in/) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் இணைத்து, அஞ்சல் உறையின் மேல் பணியிடத்தின் வரிசை எண் மற்றும் பெயரைக் குறிப்பிட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
இணை ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620006.
- விண்ணப்பத்துடன் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாகச் சரிபார்த்துக் கொள்ளவும்.