10th படித்தவர்களுக்கு இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க! TNHRCE Srirangam Temple Recruitment 2025

TNHRCE Srirangam Temple Recruitment 2025

10th படித்தவர்களுக்கு இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

TNHRCE Srirangam Temple Recruitment 2025

TNHRCE Srirangam Temple Recruitment 2025: திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கியத் தகவல்கள் ஆகும்.

TNHRCE Srirangam Temple Recruitment 2025

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp Channel Join
Telegram Channel Join

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: இந்து சமய அறநிலையத் துறை (அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்)
  • வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
  • மொத்த காலியிடங்கள்: 31
  • பணியிடம்: திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம்
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.10.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2025
  • விண்ணப்ப கட்டணம்: இல்லை
  • தேர்வு முறை: நேர்காணல்
  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பிக்க தகுதி: இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்கள்.

தங்கம் விலை தடாலடியாக சரிவு!- நகை பிரியர்கள் உற்சாகம்!

பதவி மற்றும் கல்வித் தகுதி விவரங்கள்

  1. இளநிலை உதவியாளர் (10 காலியிடங்கள்)
    • சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
    • கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. கூர்க்கா (02 காலியிடங்கள்)
    • சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
    • கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
  3. திருவலகு (04 காலியிடங்கள்)
    • சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
    • கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
  4. கால்நடை பராமரிப்பாளர் (02 காலியிடங்கள்)
    • சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
    • கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
  5. பெரிய சன்னதி உடல் (01 காலியிடம்)
    • சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
    • கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  6. பெரிய சன்னதி வீரவண்டி (01 காலியிடம்)
    • சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
    • கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  7. பெரிய சன்னதி சேமக்களம் மற்றும் இதர வாத்தியங்கள் (01 காலியிடம்)
    • சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
    • கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  8. தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியங்கள் (01 காலியிடம்)
    • சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
    • கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  9. உதவி யானைப்பாகன் (02 காலியிடங்கள்)
    • சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
    • கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். யானைக்கு பயிற்சி அளித்து, கட்டுப்படுத்தி, வழிநடத்தும் திறனுடன் யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழியை பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
  10. சலவையாளர் (01 காலியிடம்)
    • சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
    • கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
  11. கூட்டுபவர் (06 காலியிடங்கள்)
    • சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
    • கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நடைமுறை

  1. விண்ணப்பப் படிவத்தை திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://srirangamranganathar.hrce.tn.gov.in/) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் இணைத்து, அஞ்சல் உறையின் மேல் பணியிடத்தின் வரிசை எண் மற்றும் பெயரைக் குறிப்பிட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

    இணை ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620006.

  3. விண்ணப்பத்துடன் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாகச் சரிபார்த்துக் கொள்ளவும்.

வணக்கம், என் பெயர் யமுனா. நான் கணிதவியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். நான் TN நியூஸ் லைட் வெப்சைட் மூலமாக எளிமையாக தமிழில் செய்திகளை பதிவு செய்து வருகிறேன். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் உண்டு.

Post Comment

You May Have Missed